‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்!
ADDED : 4 days ago
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணம் ஆன பிறகும் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா 'ரவுடி ஜனார்த்தன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த படத்தில் ஒரு லிப் லாக் காட்சி உள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ருக்மணி வசந்த். அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் லிப் லாக் காட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.