தவெக தலைவர் விஜய்யை பார்க்க, அவர் பேச்சை கேட்க கரூரில் கூடியவர்களில் 40 பேர் பரிதாபமாக இறந்துள்ளனனர். அந்த துயர சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு அரசியல் தலைவர்கள் அந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சினிமாவை பொறுத்தவரையில் ரஜினி, கமல் தொடங்கி பலர் இரங்கல் தெரிவித்து, தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ஆனால், நடிகர் அஜித் எந்த கருத்தும் சொல்லவில்லை. அவர் ஸ்பெயின் நடக்கும் கார் பந்தயத்தில் இருந்தார். அந்த போட்டியில் அவர் அணி 3 வது இடத்தை பெற்றது.
தமிழகத்தில் இப்படியொரு சம்பவம், அதுவும் விஜய் தொடர்புடைய ஒரு சம்பவம் நடந்து இருக்கும்போது அவர் ஒரு இரங்கல் தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவர் எந்தவொரு விஷயத்திற்கும் அப்படி செய்தது இல்லை.
ஸ்பெயினில் நடந்த போட்டியில் அவர் அணி 3வது இடத்தை பெற்றது. அது பெரிய விஷயம் தான். அதை ஆர்ப்பட்டமாக கொண்டாடி இருக்கலாம். சோஷியல் மீடியாவில் அது குறித்த செய்திகளை வரவழைத்து, டிரெண்டிங் ஆக்கி இருக்கலாம். ஆனாலும், தமிழக மனநிலையை கருத்தில் கொண்டு அவர் தரப்பு அந்த வெற்றியையும் கொண்டாடவில்லை. அமைதியாகவே இருந்தது என்கிறார்கள்.