மேலும் செய்திகள்
புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்'
1 hours ago
புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா
1 hours ago
மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு
1 hours ago
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்காக அவர் ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் பேசியிருந்தார். மலையாள பத்திரிகையாளர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்வார்கள். அதனால், அங்கு எந்த சர்ச்சையும் எழவில்லை.
ஹைதராபாத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் அவர் கன்னடத்தில் பேசினார். அது தெலுங்கு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தெலுங்கில் பேசாமல் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும் என்று கோபப்பட்டார்கள்.
நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஹிந்தியில்தான் பேசினார். அப்போது கன்னடத்தில் பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்தார்.
“நான் கன்னடத்தில் சிந்திக்கிறேன், அதனால் கன்னடத்தில் பேசுகிறேன். ஆனால், புதிய மொழிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஒரு இடத்திற்கு சென்று பேசும்போது, அந்த நிலத்தின் மொழியை அவமரியாதை செய்யக்கூடாது. ஆனால், சில சமயங்களில் அது தவறாக நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், நான் ஒரு பெருமையான கன்னடிகர், கன்னடத்தில் சிந்திப்பேன், பேசுவேன், எழுதுவேன். அதேபோல், கன்னடத்தை மதிக்கும்போது, மற்ற மொழிகளையும் சமமாக மதித்து அன்பு செய்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன், எல்லா மொழிகளின் அடிப்படை எப்போதும் ஒன்றே. மற்ற மொழிகளை பேசுவதில் முயற்சி செய்வேன்,” எனப் பேசியுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago