ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா
ADDED : 2 days ago
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. தமிழில் இவர் நடித்த ஒரே படம் இதுதான். மற்றபடி தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் மாறி மாறி நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது அதன்பிறகு இப்போது வரை சோபிதா எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இதனால் அவர் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆவதற்காக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூட சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். அதுவும் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.