உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி'

சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி'


சுஜித் இயக்கத்தில், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த 'ஓஜி' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. 250 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது.

இப்படத்தை நேற்று ஹைதராபாத்தில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் சிரஞ்சீவி குடும்பத்தினர் மட்டும் பார்ப்பதற்காக பிரத்யேகக் காட்சி நடைபெற்றது. சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், படத்தின் நாயகன் பவன் கல்யாண், அவரது மகன் அகிரா நந்தன், நடிகர்கள் சாய் துர்கா தேஜ், வருண் தேஜ், வைஷ்ணவ் தேஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக கடுமையான ஜுரத்தில் ஓய்வில் இருந்தார் பவன் கல்யாண். குணமடைந்ததைத் தொடர்ந்து நேற்றைய பிரத்யேகக் காட்சியில் தனது குடும்பத்தினருடன் அவரும் கலந்து கொண்டார்.

படம் பற்றிப் பேசிய சிரஞ்சீவி, “சொல்ல வார்த்தையே இல்லை, சூப்பர், சூப்பர்,” என்று பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !