மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
2 minutes ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
2 minutes ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
2 minutes ago
உலக அளவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகம் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்தியர்கள் அதிகம் வசிப்பதே அதற்குக் காரணம். மற்ற வெளிநாடுகளை விடவும் அமெரிக்காவில் தான் இந்தியப் படங்கள் அதிக வசூலைப் பெறும். குறிப்பாக தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கான வரவேற்பு மற்ற இந்திய மொழிப் படங்களை விட அதிகம்.
இந்நிலையில் சமீப காலத்தில் அதிகமான வரி விதிப்புகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது சினிமா துறையிலும் கை வைத்துள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான வரி விதிப்பு 100 சதவீதம் என அறிவித்துள்ளார். அமெரிக்க திரைப்படத் தொழிலை வெளிநாட்டு திரைப்படங்களிலிருந்து பாதுகாக்கவே இந்த வரி விதிப்பு என்று கூறியிருக்கிறார். இந்த வரி விதிப்பு எப்படி இருக்கப் போகிறது என்ற தெளிவான விவரங்கள் இனிமேல் தான் வெளியாகும்.
இருந்தாலும் தியேட்டர்களில் இனி வெளியாக உள்ள வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் வெளியாகும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பார்வைக் கட்டணமும் இரண்டு மடங்காகலாம். இதனால், அங்குள்ள இந்திய சினிமா ரசிகர்கள் அவர்களது மொழி சார்ந்த படங்களைப் பார்க்க அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதிக டிக்கெட் கட்டணம் வரும் சூழ்நிலை தால், அமெரிக்க தியேட்டர் உரிமை விலையை வினியோகஸ்தர்கள் மிகவும் குறைத்துக் கேட்கும் சூழல் உருவாகும். இதனால், இங்குள்ள தயாரிப்பாளர்கள் தற்போதுள்ள நிலையிலிருந்து நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.
2 minutes ago
2 minutes ago
2 minutes ago