உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!

தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!


ஹிந்தியில் கடந்த 2010ல் சல்மான்கான் நடித்த 'தபாங்' என்ற படத்தில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. அதன்பிறகு அக்ஷய் குமாருடன் 'ரவுடி ரத்தோர், ஜோக்கர்' என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். பின்னர் 2014ம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சுதீர் பாபு நடிக்கும் 'ஜடாதாரா' என்ற படத்தில் கமிட்டாகி தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக போகிறார் சோனாக்ஷி சின்ஹா. இந்த படத்தில் ஒரு கவர்ச்சி நடன பெண்மணி வேடத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் நவம்பர் 7ம் தேதி தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !