மேலும் செய்திகள்
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
6 minutes ago
அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2!
6 minutes ago
மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கான பிரச்சாரப் பயணம் ஒன்றை நடிகர் விஜய் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்து போனார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல சினிமா பிரபலங்கள் அதற்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு சிலர் மட்டுமே விஜய்யை விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்கள். நடிகை ஓவியா, அவரது இன்ஸ்டா தளத்தில் 'அரெஸ்ட் விஜய்' எனப் பதிவிட்டிருந்தார். அது கொஞ்ச நேரம் மட்டுமே இன்ஸ்டா ஸ்டோரியில் இருந்தது.
ஆனால், அதற்குள்ளாக விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் எனப் பலரும் ஓவியாவை அசிங்கமாக விமர்சித்து கமெண்ட் செய்திருந்தார்கள். அவற்றின் ஸ்கிரீன் ஷாட்டை ஓவியா பகிர்ந்திருந்தார். பல கமெண்ட்கள் மிக மிக அசிங்கமாக இருந்தன.
சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இப்படி செயல்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கரூர் மரணம் குறித்து அனுதாபம் தெரிவித்த ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகளில் இப்படியான அசிங்கமான கமெண்ட்டுகள் அதிகம் பதிவிடப்பட்டு வருகிறது.
அவற்றை நிறுத்த வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவுரையும் இதுவரை வழங்கப்படவில்லை.
6 minutes ago
6 minutes ago