மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1 days ago
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகிய பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நடிகர்கள் பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தியதாக கூறி பல்வேறு இடங்களில் 30க்கும் மேற்பட்ட கார்களை கைப்பற்றினர். அதில் நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான இரண்டு லேன்ட்ரோவர் கார்களை பறிமுதல் செய்து கைப்பற்றினார்கள். ஆனால் நடிகர் துல்கர் சல்மான் இந்த கார்களை தான் சட்டப்படி வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் என்று சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த அவரது இன்னும் இரண்டு கார்களில் ஒன்றான சிவப்பு நிற நிஸாம் காரை துல்கரின் உறவினர் வீட்டில் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள். ஏற்கனவே இரண்டு கார்களை திருப்பி தர வேண்டும் என நீதிமன்றத்தில் துல்கர் சல்மான் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவரது மூன்றாவது காரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 days ago
1 days ago