மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1 days ago
நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவருக்கு பின் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்த பின்னரும் கூட, தற்போது வரை நம்பர் ஒன் இடத்திலேயே தொடர்ந்து பயணித்து வருகிறார். பல்வேறு விதமான கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது திரையுலக பயணம், வாழ்நாள் சாதனை ஆகியவற்றை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்தியாவில் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.
இதன்மூலம் கேரளாவிற்கு மலையாள திரையுலகிற்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்த மோகன்லாலுக்கு மிக பிரம்மாண்டமான விழா எடுத்து கவுரவிக்க இருக்கிறது கேரள அரசு. இந்த விழா வரும் அக்டோபர் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லால் சலாம் என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் கேரள கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் சாஜி செரியன்.
1 days ago
1 days ago