மேலும் செய்திகள்
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
38 minutes ago
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்!
38 minutes ago
ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்!
38 minutes ago
தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லிகடை' படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்து இ ருந்தாலும் முதல்நாள் டிக்கெட் புக்கிங் பெரியளவில் கை கொடுக்கவில்லை. சரஸ்வதி பூஜை என்பதாலும் பலர் வெளியூர்களுக்கு, விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும் தியேட்டரில் கூட்டம் குறைவு என்று கூறப்பட்டது.
இட்லிகடை முதல் நாள் வசூல் 11 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன்பு வந்த 'குபேரா' படம் தமிழகத்தில் வரவேற்பு இல்லை. அந்த சூழ்நிலையில் இந்த வசூல் படக்குழுவுக்கு திருப்தியை தந்துள்ளது. இந்த வார முடிவில் 50 கோடிவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயன் மாதிரி 100 கோடி வசூலிக்குமா என்பது அடுத்த வார வரவேற்பை பொறுத்தே தெரியவரும் என்கிறார்கள்.
படத்தின் பிற்பாதி ஏமாற்றிவிட்டது என்று விமர்சனங்கள் வந்ததால் வசூல் குறையுமா? அல்லது விமர்சனங்களை மீறி மக்கள் பார்ப்பார்களா என தெரியவில்லை. இன்று வெளியாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்துக்கும் கலலையான விமர்சனங்களே வந்துள்ளன. முதற்பாதி ரொம்பவே சுமார். ஆனால் படத்தின் இரண்டாம்பாதி நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் அதிரடியாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வருகின்றன. காந்தாரா முதல்பாகம் மாதிரி இந்த படம் ஓடுமா என்பதும் அடுத்த வாரமே தெரிய வரும் என்கிறார்கள் கோலிவுட்டில்.
38 minutes ago
38 minutes ago
38 minutes ago