உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்!

ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்!


ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் 'தேவரா' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராம்சரணுடன் நடித்த அனுபவம் குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், ''ராம்சரணை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான ஆற்றல் கொண்ட ஜென்டில்மேன். விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டவர். ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு மாணவரை போலவே படப்பிடிப்பு தளத்துக்கு வருவார். அவரது அந்த எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நிறையவே ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் இப்படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பூச்சி பாபு'' என்கிறார் ஜான்விகபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !