உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல்

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல்


தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. இப்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராகவே இருக்கிறார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

42 வயது ஆன த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என ஒரு தகவல் பரவி பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது. மாப்பிள்ளை சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும், இரண்டு குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாகவே நட்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

த்ரிஷாவுக்கு இதற்கு முன்பு தொழிலதிபர் வருண் மணியனுடன் 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை. திருமணம் ரத்து செய்யப்பட்டது.

சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பல்வேறு காதல் கிசுகிசுக்களில் த்ரிஷாவின் பெயர் இடம் பெற்றது. இப்போதும் கூட அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கிசுகிசு உண்டு. மனைவி, மகன், மகள் என தனது குடும்பத்தினரைப் பிரிந்து தனியே இருக்கும் டாப் நடிகர் ஒருவருடன் த்ரிஷாவை சேர்த்து வைத்து கிசுகிசுக்கிறார்கள்.

இதுப்பற்றி விசாரிக்கையில் உண்மையில்லை என த்ரிஷா தரப்பு விளக்கமளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !