இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர்
அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப் நடிக்கும் படம் மைலாஞ்சி. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சென்னையில் நடந்த விழாவில் இளையராஜா குறித்தும், படம் குறித்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மிஷ்கின் பேசியது...
''என் சினிமா அறிவை உரசி பார்த்தவர் இந்த பட இயக்குனர் அஜயன் பாலா. அவர் பண்பான, அன்பான மனிதர். அதனால், அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அவரை ஏன் ராஜானு சொல்கிறோம் என்பதை இந்த பட பாடல்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். இந்த பட ஒளிப்பதிவாளர் செழியன் சீமான் அறையில் வளர்ந்தவர். அவரை பற்றி பேசும்போதெல்லாம் இவர் அழுவதை பார்த்து இருக்கிறேன். பசியோடு இருக்கும்போது பலமுறை சாப்பாடு அளித்து இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு படம் வெற்றி பெற, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர் முக்கியம். நானும் சிங்கம் புலியும் நண்பர்கள், நான் ஆராதிக்கிற மனிதர். அவர் இரவு 12 மணிக்குமேல் ட்ரிங்கில் இருக்கும்போது என்னை அழைப்பார். நானும் ட்ரிங்கில் இருப்பேன். எத்தனையாவது ரவுண்டு போயிட்டு இருக்குது என்பேன். அந்த 12 மணிக்கு என்னிடம் ஐ லவ் யூ என்பார். என் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். அவர் ஜாலியாக பேசிட்டே இருப்பார். இப்படிப்பட்ட நபர்களை சினிமாவில்தான் பார்க்க முடியும். ஒரு கிழவன் இறந்துவிட்டால் ஒரு நுாலகம் எரிந்துவிடுகிறது என்பார்கள். சிங்கம்புலி, சீமான் ஆகியோர் கிழவன்கள்தான்'' என்றார்.