ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம்
ADDED : 29 minutes ago
சுதா கொங்கரா இயக்கும் தனது 25வது படமான பராசக்தி-யில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதையடுத்து ஏற்கனவே தன்னை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் நடித்து முடித்ததும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
அப்படம் குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், ‛‛சிவகார்த்திகேயன் நடிப்பில் நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. சிவகார்த்திகேயனை வைத்து நான் இயக்கும் இந்த படம் வித்தியாசமான சயின்ஸ் பிக் ஷன் கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்தில் ஒரு மாறுபட்ட சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்கலாம்'' என்கிறார்.