ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை
ADDED : 3 minutes ago
ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வரும் படம் கிங். சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் மார்பிளிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 2026ம் ஆண்டில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ஜவான் படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த கிங் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.