உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி

கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி


இயக்குனர் நலன் குமாரசாமி தற்போது நடிகர் கார்த்தியை வைத்து 'வா வாத்தியார்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ள இந்த படம் இவ்வருட டிசம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இப்போது பிரபல தமிழ் வார இதழுக்கு நலன் குமாரசாமி அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் இயக்கும் படங்கள் இயல்பாக கார்த்தி பண்ணக்கூடிய படங்களாக தான் உள்ளது. தன்னை ஒரு ஹீரோவாகவே பார்க்காமல் தன்னை ஒரு டெக்னீஷியன் மாதிரி தான் பார்க்கிறார். அது அவர்கிட்ட வெளிப்படையாக தெரிகிறது. கார்த்தி, விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பதால் தான் நல்ல திரைக்கதை கொண்ட பெரிய பட்ஜெட்டில் யோசிக்க முடிகிறது. இல்லையெனில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சிறிய படங்கள் தான், புதுமுகங்கள் தான் என குறைந்த பட்ஜெட் படமாகி விடும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !