உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்!

சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்!


நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக திரைக்கு வந்த படம் 'தங்கலான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே விக்ரம் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.

கடந்த சில மாதங்களாக இந்த படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் மடோன் அஸ்வின் வெளியேறினார் என தகவல் வெளியானது. இன்னும் இந்த படத்திற்கான இயக்குனர் யார் என்பது உறுதியாகவில்லை.

இந்த நிலையில் இந்த படத்தை தங்கலான் படம் வெளியாகுவதற்கு முன்பே ஒப்பந்தம் செய்ததால் இந்த படத்திற்காக விக்ரமிற்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், சமீபகாலமாக உள்ள டிஜிட்டல், சாட்டிலைட் மார்கெட் நிலவரங்கள் மற்றும் விக்ரம் படங்கள் தொடர் தோல்வியை தழுவியதை கருத்தில் கொண்டு சாந்தி டாக்கீஸ் நிறுவனர் அருண் விஷ்வா, விக்ரமிடம் சம்பளத்தை குறைத்து கொண்டு நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்து கொண்ட விக்ரம் ரூ.50 கோடி சம்பளத்திலிருந்து ரூ.30 கோடி சம்பளம் பெற்று நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனை திரைத்துறையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

SANKAR
2025-10-13 04:50:26

After few years 30 will go down to 3.His period is over