சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு
பத்மஸ்ரீ விருதுபெற்ற பக்தி இசை மாமேதை அனூப் ஜலோட்டா மற்றும் பிரபல பின்னணி பாடகி மதுஸ்ரீ, பாடகர்-நடிகர் சுஹர்ஷ் ராஜ் நடித்த புதிய மியூசிக் வீடியோ 'காபிர் தீவானா'. இந்த மியூசிக் வீடியோ மூன்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை பாலிவுட் புகழ் பெற்ற பாடலாசிரியர் குமார் எழுதியுள்ளார். இசை, கதை மற்றும் இயக்கம் தேவாஷிஷ் சார்கம் செய்துள்ளார்.
இந்த மியூசிக் வீடியோவைப் பற்றி பேசும் போது அனூப் ஜலோட்டா, சுஹர்ஷ் ராஜ் குறித்து பேசும்போது, ''சிறந்த குரலும், அதே நேரத்தில் வலிமையான நடிப்பு திறனும் கொண்ட ஒருவரை காண்பது அரிது. இந்த வீடியோவில் சுஹர்ஷ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அவர்கள் என்னை மிகுந்த மதிப்புடன் பார்க்கிறார்கள். இந்த வீடியோவில் சுஹர்ஷ், அழகான ஹீரோவாகவும், தாடியுடனும் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார். அவரை நான் 'சின்ன பச்சன்' என்று கூட அழைப்பேன்.” என்றார்.
பாடகி மதுஸ்ரீ பேசுகையில், ''தனது முதல் ஆல்பத்தை வெளியிடுவது அவ்வளவு எளிதல்ல. அதற்காக மிகுந்த உழைப்பு தேவைப்படுகிறது. சுஹர்ஷின் பாடலையும், அவரது நடிப்பையும் நான் பார்த்தேன்; இரண்டிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது தந்தை மற்றும் தாத்தாவின் ஆசீர்வாதத்துடன், அந்த திறமை அவருடைய குடும்பத்தின் ரத்தத்தில் கலந்துள்ளது.” எனக்கூறினார்.
இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் தேவாஷிஷ் சார்கம் ராஜ் கூறுகையில், ''காபிர் என்பது கடவுளை நம்பாத ஒருவரை குறிக்கும் சொல். எங்கள் கதையில், நாயகன் தனது காதலிக்கு அளவில்லாத பக்தியுடன் இருக்கிறார். அவளைத் தான் தன் கடவுளாகக் காண்கிறார். ஆனால் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் வீடியோவைப் பார்த்து அறியலாம்.” என்றார்.