எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 45 days ago
நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு படங்கள் இல்லை சமீபத்தில் ஒரு செய்தி பரவ, அதற்கு சென்னையில் நடந்த ‛மொய் விருந்து' நிகழ்ச்சியில் அவர் பதிலடி கொடுத்தார்.
நான் தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். நான் நடித்த தெலுங்கு படம் (சங்கராங்கி வஸ்துனம்) 350 கோடி வசூலித்தது. தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். மொய் விருந்து மாதிரி, விரைவில் என் திருமண விருந்தும் நடக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிக்காக பலரிடம் உதவி கேட்டேன். சிலர் மட்டுமே உதவினார்கள். அப்போது பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டேன். அதற்காக வருத்தப்படவில்லை. நாம் நல்லா இருக்கும்போது பலர் வருவார்கள். நம் கஷ்ட காலத்தில் சிலர்தான் வருவார்கள். அவர்களை மறக்க கூடாது என்றார்.