திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்'
ADDED : 24 minutes ago
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் திரைக்கு வந்த படம், 'அஞ்சான்'. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 2014ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. ஆனால் ஆச்சர்யமாக இந்த படம் இந்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் விமர்சகர்கள் குறிப்பிட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்ட காட்சிகளை நீக்கி விட்டு, 14 நிமிடங்கள் வரை நீளத்தை குறைத்து படத்தை வெளியிட பணிகள் நடந்து வருகிறது. முன்னணி எடிட்டர்கள் சிலர் இந்த முயற்சியை செய்து வருகின்றனர். ஒரு தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கி காட்டும் முயற்சியில் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது.