மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது கொடுத்து கவுரவித்த மேற்கு வங்க அரசு
ADDED : 5 minutes ago
தெலுங்கு திரை உலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக பயணித்து வருபவர் நடிகர் மோகன் பாபு. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன் பாபு, தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் நான்கு படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் விஷ்ணு மஞ்சு தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன் பாபுவின் இந்த கலை பயணத்தை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மேற்கு வங்க அரசு சமீபத்தில் குடியரசு தினத்தன்று மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மோகன் பாபுவுடன் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் கலந்து கொண்டார்.