உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வருங்கால சினிமா இப்படிதான்: சீனாவில் வந்த மாற்றம்

வருங்கால சினிமா இப்படிதான்: சீனாவில் வந்த மாற்றம்


சென்னையில் நடந்த ஒளிப்பதிவாளர் செழியன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சீனாவில் இப்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் அறிமுகம் ஆகி இருக்கிறது. வருங்காலத்தில் அது பல இடங்களுக்கு பரவும். நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற படங்கள் உருவாகாது. இப்போது வெளியாகும் படங்களில் பாடல்கள் இடம் பெறுவதில்லை. அவை தனி ஆல்பமாக வெளியாகும். அதன் பிறகு அதற்கென்று தனி ஒரு இசை வங்கி உருவாகும். சினிமா மாறிக்கொண்டு இருக்கிறது என்றார்.

இந்த தகவல் பலரும் ஆச்சரியப்படுத்தியது. இதே விழாவில் பேசிய பீம்சிங் மகனும் பிரபல எடிட்டருமான லெனின் 'என் பேத்திகளுக்கு பீம்சிங் பற்றி தெரியவில்லை' என்றார். பிரபல இயக்குனர் ஞானராஜசேகரன் பேசுகையில், 'மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில் தான் புது முகங்களுக்கு வரவேற்பு. புது முயற்சிகளுக்கு ஆதரவு' என்று பேசினார். இந்த தகவல் கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !