மார்ச்சில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நானி படத்தின் அதிர்ச்சி தரும் அப்டேட்
தெலுங்கில் இளம் நடிகர் நானி, தான் நடிக்கும் படங்களின் கதையையும் கதைக்களத்தையும் கவனமாக தேர்ந்தெடுத்து, உறுதியான வெற்றியை பெற வேண்டும் என்கிற நோக்கில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'தசரா' என்கிற படத்தில் நானி நடித்திருந்தார். அந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் 'பாரடைஸ்' என்கிற படத்திற்காக தற்போது கூட்டணி சேர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக இந்த படம் மார்ச்சில் அல்ல, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காரணம் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது. படம் துவங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் உள்ள சிக்கலை பாரடைஸ் படக்குழுவினர் தற்போது நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.