உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வந்த பிறகு இன்னும் பாராட்டு பெறும் 'சிறை' மற்றும் விக்ரம் பிரபு

ஓடிடியில் வந்த பிறகு இன்னும் பாராட்டு பெறும் 'சிறை' மற்றும் விக்ரம் பிரபு


தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்களில் இருக்கிறார்கள். அப்படியான நடிகர்களில் விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்கள். தமிழைத் தவிர தென்னிந்திய அளவிலும் அவர்கள் ரசிகர்களை ஈர்க்கும் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

இதர வாரிசு நடிகர்களில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு மற்ற வாரிசு நடிகர்களைக் காட்டிலும் சில சிறந்த படங்களில் நடித்து சத்தமில்லாமல் வரவேற்பைப் பெற்று வருகிறார். அப்படியான ஒரு படமாக அவரது 25வது படமான 'சிறை' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

ஓடிடியில் வந்த பிறகு அந்தப் படத்தைப் பார்த்த பலரும் தற்போது படத்தையும், விக்ரம் பிரபுவையும் பாராட்டி வருகிறார்கள். இத்தனைக்கும் அந்தப் படத்தில் அறிமுக நடிகரான அக்ஷய்குமாருக்கும் முக்கியத்துவம் அதிகம். இருந்தாலும் விக்ரம் பிரபு அவருக்கான பெயரை எந்த விதத்திலும் பறிகொடுக்கவில்லை.

இதற்கு முன்பு “இறுகப்பற்று, டாணாக்காரன்' ஆகிய படங்களும் அவருக்கு இப்படியான ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்தன. 2025ல் அவர் நடித்து வந்த தமிழ்ப் படமான 'லவ் மேரேஜ்' படம் சுமாராக இருந்தது என்றாலும் சரியாக ஓடவில்லை. தெலுங்கில் அறிமுகமான 'காட்டி' படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் அவரது 25வது படமாக வந்த 'சிறை' படம் விக்ரம் பிரபுக்கு பெயர் தேடித் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !