உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 கிமீ நடந்தே படப்பிடிப்புக்கு வந்த தர்மேந்திரா ; ஷோலே இயக்குனர் புதிய தகவல்

50 கிமீ நடந்தே படப்பிடிப்புக்கு வந்த தர்மேந்திரா ; ஷோலே இயக்குனர் புதிய தகவல்


இந்திய சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் இன்றளவும் ஆராதிக்கப்பட்டு வரும் படம் 'ஷோலே'. கடந்த 1975ல் வெளியான இந்த படம் 50 வருடங்கள் கடந்தும் தற்போதும் பேசப்படும் படமாக இருக்கிறது. இதில் அமிதாபச்சன், தர்மேந்திரா, திலீப்குமார், அம்ஜத் கான், ஹேமமாலினி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார்.

கடந்து சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவருவான தர்மேந்திரா காலமானார். இந்த நிலையில் சமீபத்திய சிறப்பு நிகழ்வு ஒன்று ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பியும், தர்மேந்திராவின் மனைவியும் ஷோலே கதாநாயகியுமான ஹேமமாலினியும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரமேஷ் சிப்பி, தர்மேந்திரா குறித்து ஒரு ஆச்சரியமான தகவலை கூறினார்.

“ஒரு முறை ஷோலே படப்பிடிப்பின் போது தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நடந்தே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முடிவு செய்தார் தர்மேந்திரா. படப்பிடிப்பு நடக்கும் இடம் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஆனாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் எழுந்து நடக்க தொடங்கினார் தர்மேந்திரா. கிளம்புவதற்கு முன் ஒரு இளநீரில் ஓட்காவை சேர்த்து குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார் தர்மேந்திரா. இப்படி மிக்சிங் செய்து குடிப்பது ரொம்பவே எனர்ஜியை தரும் என்பது அவரது எண்ணம், நம்ப மாட்டீர்கள்..

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்து காலை 7 மணி அளவில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டார் தர்மேந்திரா. வந்த பிறகு ஒரு மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்தவர், அதன் பிறகு நான் ரெடி என்று படப்பிடிப்பிற்கு தயாராக வந்து நின்றார். ஒரு பக்கம் தர்மேந்திரா ரொம்பவே ஜாலியானவர் என்றாலும் இது போன்ற சில விஷயங்களை அவர் விடாப்பிடியாக நின்று சாதிப்பார்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ரமேஷ் சிப்பி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !