மனநல தூதர் ஆனார் தீபிகா
உலக மனநல தினத்தையொட்டி, இந்திய நாட்டின் மனநல அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.
மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்து செல்வதில் தீபிகா படுகோனே ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்த பொறுப்புக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், 'உலக மனநல தினத்தன்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.