உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு

சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சதானந்தன் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். அவருக்காக, கண்ணூரில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: சதானந்தன் மாஸ்டர் அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மாற வாழ்த்துகிறேன். என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, எனக்கு பதிலாக சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமித்தால் மகிழ்ச்சி அடைவேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நான், லோக்சபா தேர்தலின் போது, மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிக்கும் விதமாக என்னை கட்சி மேலிடம் மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம். எனது திரைப்பட வாழ்க்கையை விட்டு விட்டு நான் ஒருபோதும் அமைச்சராக இருக்க விரும்பவில்லை. சமீபத்திய காலங்களில், எனது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !