உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன்

அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன்

மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்திலும் நாயகியாக நடித்தார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‛பைசன்' படத்தில் ஹீரோ துருவ் அக்காவாக நடிக்கிறார்.

இது குறித்து அவர் கூறியது, ‛‛கர்ணன் படத்துக்குபின் அடுத்த படங்களில் நடிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் என்னை கூப்பிடவில்லை. பைசன் படத்துக்கு அழைத்து தயங்கி பேசினார். ஹீரோவிற்கு அக்காவாக நடிக்க முடியுமா என்றார். நானோ அக்கா, தங்கை, அம்மா என எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்றேன். இந்த படத்துக்காக மீண்டும் திருநெல்வேலி சென்றேன். நான் மலையாளி என்றாலும், அந்த மக்கள் அன்பால் அந்த ஊர் ஆளாக மாறிவிட்டேன். நான் ஒரு காட்சியில் நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தபோது உடனே கூலிங் கிளாஸ் உடன் குதித்து என்னை காப்பாற்றினார் இயக்குனர் மாரி செல்வராஜ்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !