போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா?
ADDED : 11 minutes ago
கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியாகும் எந்த படமும் வெற்றி பெறவில்லை. தலைவன் தலைவி படத்திற்கு பின் எந்த படமும் பெரிய ஹிட் ஆகவில்லை. கடந்த வாரம் விதார்த் நடித்த மருதம், சோனியா அகர்வாலின் வில், ரஞ்சித் நடித்த இறுதி முயற்சி, கயிலன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் எந்த படமும் ஓடவில்லை. மருதம் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் ஷோ புக் ஆகவில்லை. தீபாவளிக்கு பைசன், டியூட், டீசல் உள்ளிட்ட 6 படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் அந்த படங்களில் ஏதாவது வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதும் தமிழகத்தில் 100க்கும் அதிகமான தியேட்டரில் காந்தாரா சாப்டர் 1 ஓரளவு புக்கிங்குடன் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.