உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி

பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி

கடந்த சில நாட்களாகவே விலை உயர்ந்த கார்களை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அந்த பரபரப்பு தற்போது கொஞ்சம் அடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே மம்முட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதற்கு முன்னதாக அவர் மோகன்லால், பஹத் பாசில், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சிலகட்ட படப்பிடிப்பு கேரளா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மம்முட்டியின் உடல்நல குறைவு காரணமாக சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மம்முட்டி இல்லாமல் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மம்மூட்டி உடல்நலம் தேறி ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த ஷெட்யூல் முடிவடைந்ததும் தற்போது லண்டனில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லண்டனில் தான் மிக முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக நடிகர் மம்முட்டி சென்னை ஏர்போர்ட்டில் இருந்து துபாய் வழியாக லண்டன் கிளம்பி சென்றார். அவரது மகனான நடிகர் துல்கர் சல்மான் அவரை விமான நிலையத்திற்கு வந்து வழி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !