2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1'
ADDED : 13 minutes ago
2025ம் ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில், “சாவா - ஹிந்தி', 'காந்தாரா 1 - கன்னடம்', 'சாயரா - ஹிந்தி', 'கூலி - தமிழ்' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன.
இவற்றில் 'சாவா, காந்தாரா 1' ஆகிய படங்கள் மட்டுமே இந்திய பாக்ஸ் ஆபீஸில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருக்கின்றன. 'சாவா' படம் இந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி வெளிவந்தது.
'காந்தாரா 1' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியானது. 11 நாளில் 655 கோடி வசூலை உலக அளவில் கடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் பிரேக் ஈவன் செய்துள்ளது. இப்படத்திற்கான ஓட்டம் இன்னும் நீடிக்கும் என்றே சொல்கிறார்கள். அதனால், 'சாவா' வசூலை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.