உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன்

துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன்


'மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது' என்று சொல்வது போல், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்த போதும், 'என்னை மையமாகக் கொண்ட கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார், புயல் காமெடியன். சில, 'மாஜி ஹீரோ'க்கள் நடிப்பது போன்று, 'கேரக்டர் ரோல்'களில் நடிக்க சொன்னால் தடாலடியாக மறுத்து விடும், புயல் காமெடியன், 'பட வாய்ப்பு இல்லை என்பதற்காக, துக்கடா வேடங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு எண்ணத்தோடு என்னை தேடி யாரும் வராதீர்கள்...' என்று இயக்குனர்களை துரத்தி அடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !