வாசகர்கள் கருத்துகள் (1)
இந்த மீடியா ஏன் இப்படி ஒரு கேவலமான விஷயமா மாறிடுச்சு? எப்பவும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுறீங்க. தைரியம் இருந்தா திமுக கட்சித் திருடர்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும்னு கேள்வி கேக்குறீங்க.
நடிகை சமந்தாவுக்கும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல்' இணையத் தொடர்களின் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு என்பவருக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருமணமானவரான ராஜ் அவருடைய மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.
சமந்தா - ராஜ் இருவருக்கும் இடையே 'பேமிலி மேன்' படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. சமந்தா தற்போது மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியுள்ளார். நேற்றைய தீபாவளித் திருநாளை புதிய வீட்டில் தனது காதலர் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சமந்தா.
இதன் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்களோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சமந்தா, ராஜ் இதுவரையில் தங்கள் காதலைப் பற்றி எதுவும் சொன்னதில்லை.
இந்த மீடியா ஏன் இப்படி ஒரு கேவலமான விஷயமா மாறிடுச்சு? எப்பவும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுறீங்க. தைரியம் இருந்தா திமுக கட்சித் திருடர்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும்னு கேள்வி கேக்குறீங்க.