சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், அவருடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த வருட தீபாவளிதான் அவர்களுக்கு தலை தீபாவளி.
தனது தலை தீபாவளியை வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் கொண்டாடாமல் கணவர் ஆண்டனியுடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார் கீர்த்தி. ஒரு மலைப் பிரதேசத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்களது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. அங்கு பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியுள்ளது தலை தீபாவளி ஜோடி.
“ஒரு திட்டமிடப்படாத, ஆயினும் சாகசமான பயணம்... தல தீபாவளிக்காக எல்லாவற்றையும் ஈடுகட்டுவதற்காக….”, என தனது தலை தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் அவரது அடுத்த தமிழ் வெளியீடு. ஆகஸ்ட் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. விரைவில் புதிய தேதி பற்றிய அறிவிப்பு வரலாம்.