ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ, கூலி போன்ற படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இவர் இயக்க உள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று(அக்., 23) நடந்தது. சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரனுக்கு விருப்பமான கேங்ஸ்டர் பாணியில் இந்த கதை உருவாகியுள்ளது. இதற்காக தாய்லாந்தில் சில மாதங்களாக கடும் பயிற்சி எடுத்துள்ளார் லோகேஷ். கைதி 2, ரஜினி, கமல் இணையும் படம், பவன் கல்யாணின் அடுத்த படம் என ஏதாவது ஒன்றை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே ஹீரோ ஆகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் டெக்னீசியன் விவரம் விரைவில் வெளியாகியுள்ளது.