உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....!

‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....!

தீபாவளி விடுமுறை முடிந்துவிட்டது தியேட்டர்களில் வெளியான படங்களை பார்த்துவிட்டோம் என்ற அலுப்பில் உள்ள ரசிகர்களா? நீங்கள்... உங்களை மேலும் களைப்படையாமல் இருக்க, இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்களாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'சக்தி திருமகன்' முதல் நந்தா, யோகி பாபுவின் நடிப்பில் உருவான 'அக்யூஸ்ட்' வரை வெளியாகவுள்ளன. இந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பதை பார்க்கலாம்.

சக்தி திருமகன்
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சக்தி திருமகன்'. தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நாளை (அக்.24ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ஓஜி
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவந்து வெற்றிப் பெற்ற திரைப்படம் 'ஓஜி'. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், பிறமொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் இன்று (அக்.23ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அக்யூஸ்ட்
நடிகர் நந்தா, காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'அக்யூஸ்ட்'. இந்த திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (அக்.24ம் தேதி) வெளியாகிறது.

கிஷ்கிந்தபுரி
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கிஷ்கிந்தபுரி'. இந்த திரைப்படம் ஜீ5 பிரிமியர் தளத்தில் நாளை (அக்.24ம் தேதி) வெளியாகிறது.

பரம் சுந்தரி
பாலிவுட்டில் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பரம் சுந்தரி'. இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் நாளை (அக்.24ம் தேதி) வெளியாகிறது.

குருசேஷ்த்ரா 2
மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட வெப்தொடர் 'குருசேஷ்த்ரா 2'. இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை (அக்.24ம் தேதி) முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

ஜம்போ சர்க்கஸ்
கன்னடத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் 'ஜம்போ சர்க்கஸ்'. ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நாளை (அக்.24ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !