என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு
ADDED : 62 days ago
பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு, தலைவாசல் விஜய், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடித்த படம் ‛தேவர் மகன்'. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. 1992ல் அக்., 25ல் அன்று வந்த தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 5 தேசிய விருதுகளை வென்றது. மேலும் அன்றைக்கு இந்தியா சார்பில் வெளிநாட்டு பிரிவு சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
‛தேவர் மகன்' படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில், ‛‛என் குழந்தைக்கு வயது 33. அதை உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நான்'' என கமல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.