உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்'

ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்'

2015ல் வெளியான 'பாகுபலி 1', 2017ல் வெளியான 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து 'பாகுபலி - தி எபிக்' என்ற பெயரில் அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அதற்கான வெளியீட்டு டிரைலரை நேற்றிரவு படம் வெளியாகும் ஐந்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள்.

படம் பற்றி ஏற்கெனவே ரசிகர்களுக்குத் தெரியும் என்பதால் ஒரு 'கான்செப்ட்' அடிப்படையில் டிரைலரை 'கட்' செய்துள்ளார்கள். “இரண்டு சகோதரர்கள் - ஒரு சிம்மாசனம், இரண்டு பெண்கள் - ஒரு மோதல், இரண்டு சத்தியங்கள் - ஒரு மீறல், இரண்டு படங்கள் - ஓர் அனுபவம்,' ஆகியவற்றை வைத்து இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலரில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இடம் பிடித்துள்ள அனைவரும் டிரைலரில் ஒரு சில வினாடிகளாவது இடம் பெற்றுள்ளார்கள். ஆனால், முதல் பாகத்தில் இளம் பிரபாஸின் காதலியாக நடித்த தமன்னாவின் ஒரே ஒரு 'வைட் காட்சி' மட்டும் ஒரு வினாடி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

முதல் பாகம் 2 மணி நேரம் 39 நிமிடங்களும், இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 51 நிமிடங்களும் ஓடக் கூடிய படங்களாக இருந்தது. இரண்டும் சேர்ந்து 5 மணி நேரம் 30 நிமிடங்கள். ஆனால், 'பாகுபலி - தி எபிக்' படத்தை 3 மணி நேரம் 45 நிமிடம் ஓடக் கூடிய படமாக சுருக்கி, 1 மணி நேரம் 45 நிமிடத்தை நிக்கி இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !