உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை

ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை


தளபதி நடிகரின் மூன்றெழுத்து படத்தில் ஏற்கனவே நடித்திருந்த, முகமூடி நடிகை, தற்போது அவரது கடைசி படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் அவருக்கு பெரிய ரோல் என்று சொல்லி மிகச் சிறிய வேடமே கொடுத்து விட்டனர். அதுமட்டுமின்றி, 'எடிட்டிங்' என்ற பெயரில், அம்மணி கஷ்டப்பட்டு நடித்த காட்சிகளை, 'கட்' பண்ணி எறிந்து விட்டனராம். இதனால், 'பெரிய நடிகரின் படம் என்று நம்பி நடித்த என்னை, துக்கடா நடிகையாக்கி விட்டனர்...' என்று புலம்பி வருகிறார், முகமூடி நடிகை.

அரசியல்வாதி ஆன பிறகு, தளபதியின் கேரக்டரே மாறிவிட்டது என்றும் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !