சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்!
ADDED : 36 minutes ago
தற்போது தெலுங்கில் ‛விஸ்வாம்பரா, மன சங்கர வர பிரசாத் காரு' போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆன்லைனில் ஆடை விற்பனை செய்பவர்கள் தனது அனுமதியின்றி தன்னுடைய பெயர், குரல், புகழ் போன்ற அடையாளங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற விளம்பரங்கள் எனது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் பெயர், அடையாளம், புகைப்படம், குரல் போன்றவற்றை வர்த்தக ரீதியாக அவரது அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.