உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!


‛மதராசபட்டினம், தெய்வ திருமகள், தலைவா' போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல். விஜய். வெற்றி, தோல்வி படங்களைக் கடந்து பிஸியாக படங்களை இயக்கி வருகிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ஏ.எல். விஜய் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதல் ரீசட் ரிப்பிட்' என தலைப்பு வைத்துள்ளதாக கலகலப்பான புரோமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர். ‛வனமகன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.எல். விஜய் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த புரோமோ வீடியோவில் ஹாரிஸ் ஜெயராஜ் கலகலப்பான நடிப்பையும் வெளிபடுத்தி இருந்தார்.

இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன் என புதுமுகங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஒரு முக்கியமான குணசித்திர வேடத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !