ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்!
ADDED : 4 minutes ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
ஏற்கனவே டிஜிட்டல் வியாபாரம் நிலுவையில் இருந்ததால் பலமுறை இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது இந்த படத்தின் பிஸ்னஸ் கட் தொகுப்பை அமேசான் ஓடிடி நிறுவனம் தரப்பில் பார்த்துள்ளனர். இப்போது இந்த படத்தை அமேசான் ஓடிடி நிறுவனம் பெருந்தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.