சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு ; ஹிந்தியில் நுழைகிறாரா சிவகார்த்திகேயன்?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 'மதராஸி' திரைப்படம் வெளியாகி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கும் படங்களின் பட்டியலும் வரிசை கட்டி நிற்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை சென்ற சிவகார்த்திகேயன் அங்கே பிரபல பாலிவுட் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ள நிகழ்வு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் இயக்குனர் மணிரத்னம் போல பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே நடிக்க விரும்பும் ஒரு இயக்குனர் தான் சஞ்சய் லீலா பன்சாலி. சமீப வருடங்களாக வரலாற்று புகழ்வாய்ந்த குறிப்பாக பெண் ஆளுமைகள் பற்றி தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவரை சிவகார்த்திகேயன் சந்தித்து இருப்பதன் மூலம் நேரடியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பாலிவுட்டில் நுழையும் முயற்சியா என்று தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.