உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்'

நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்'


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'பைசன்' படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.,17ல் ரிலீசானது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்ற நிலையில், தனது படங்களுக்கு இளையராஜா உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை வைக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிவாஸ் கே பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் ரொம்ப ஜாலியான பர்சன். சீரியஸாக இருந்தால் எனக்கு மியூசிக் வராது. மாரி செல்வராஜ் என்னை அதிகம் நம்பினார். அந்த நம்பிக்கை தான் என்னை மேம்படுத்த உதவியது.

படத்தில் வரும் 'சீனிக்கல்' பாடலுக்கு பதிலாக முதலில் 'மலர்ந்தும் மலராத' பாடலையே மாரி செல்வராஜ் வைக்க நினைத்திருந்தார். அதை என்னிடம் சொல்லி, அதற்காக உரிய இசையமைப்பாளரிடம் 'ரைட்ஸ்' வாங்கப்போகிறேன் என்றார். ரைட்ஸ் வாங்குவது எல்லாம் என்னிடம் வேலைக்கே ஆகாது. ஒரு இசையமைப்பாளரை வைத்துக்கொண்டு வேறொரு இசையமைப்பாளரின் பாட்டுக்கு போவது எப்படி என கோபமடைந்தேன். இருங்க இப்பவே ஒரு டியூன் போடுறேன், பிடிக்கலைனா ரைட்ஸ் வாங்கிக்கோங்க அப்படினு சொன்னேன். அந்த கோபத்துலயே 10 நிமிஷத்துல போட்ட டியூன் தான் அந்த சீனிக்கல் பாடல். அடுத்த 20 நிமிடத்தில் அதற்கான வரிகளை மாரி செல்வராஜ் எழுதிவிட்டார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போது என் பாடல் மட்டும்தான் வரவேண்டும் என அவரிடம் கூறினேன்.

நான் ஏன் இளையராஜா பாடலையோ, யுவன் சங்கர் ராஜா பாடலையோ பயன்படுத்த வேண்டும்? நான் ஒன்றும் மற்றவர்களை விட குறைவான திறன் கொண்ட இசையமைப்பாளரா? 80களின் இடையே நடக்கும் கதை என்பதால் ரியலிஸ்டிக்கான விஷயங்களுக்காக 'ஹே உன்னைத்தானே' எனும் இளையராஜா பாடலை தான் மாரி செல்வராஜ் வைத்திருந்தார். ஆனால் அந்த பாடலை மாற்றிவிட்டு ஹிந்தி பாடலை சேர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

PV
2025-10-27 19:31:34

Good to be confident but over confidence is dangerous. Don't compare you with Maestro.