வாசகர்கள் கருத்துகள் (1)
அமரர் ஊர்தி போலவே உள்ளது
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குனரானவர் அட்லி. விஜய் நடித்த 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' படங்களை இயக்கியவர், பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்தப் படம் 1000 கோடியை வசூல் செய்ததுடன், ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.
இதனால் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக அட்லி மாறினார். உலக பணக்காரர்களில் ஒருவான முகேஷ் அம்பானி இல்ல திருமண நிகழ்விலும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு மேலும் கவனர் ஈர்த்தார். இவர் அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜூனின் நடிப்பில் படம் இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி, சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்ற நவீன சொகுசு காரை வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 10 கோடி ஆகும். சொகுசுகார்களை வாங்கி சேகரிப்பது அட்லியின் பழக்கம் என்கிறார்கள். ஏற்கெனவே அட்லியிடம் பிஎம்டபிள்யூ, ரேன்ஞ் ரோவர் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரர் ஊர்தி போலவே உள்ளது