உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்!

அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்!


அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி என்கிறார்கள். ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத் மற்றும் மும்பையில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர்.

தற்போது மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன், மிருணாள் தாகூர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி வருகின்றனர் என பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கு அடுத்தகட்ட படப்பிடிப்பை அமெரிக்கா அல்லது லண்டன் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !