உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா?

பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா?


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை, தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடிக்கின்றார்.

ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை என்பதால் வழக்கமான காதல் காட்சி, டூயட் இல்லாமல் முழுநீள அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !