இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா?
ADDED : 7 hours ago
'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இதன் வெற்றிக்குப் பிறகு 'ஸ்டார்' எனும் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஸ்டார் படத்திற்கு பிறகு இளன் அடுத்து அவரே இயக்கி கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது .
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக 'குடும்பஸ்தன்' படத்தில் கதாநாயகியாக நடித்த சான்வீ மேகனா இணைந்து நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், 'பியார் பிரேமா கல்யாணம்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.