பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ?
ADDED : 58 days ago
கொரியன் சினிமாவில் ஆக்சன் படங்களில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற நடிகர் டான் லீ என்கிற மா டன்க் சியாக். கடந்த சில வருடங்களாக இவர் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் என்கிற தகவல் பல்வேறு தளத்தில் பரவி வந்தது.
தற்போது கொரியாவில் உள்ள சில முக்கிய பத்திரிகை செய்திகளில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ஸ்பிரிட்' படத்தின் மூலம் டான் லீ அறிமுகமாகிறார் என செய்திகள் பகிர்ந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.